தூத்துக்குடியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பகுதி திமுக பிரதிநிதி தீபக் ராஜேஷ், மற்றும் சுபாஷ் வேளாங்கண்ணி ஆகியோர் தலைமையில், கலைஞர் அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்வில் திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், முத்தையாபுரம் பகுதி செயலாளர் மேகநாதன், மாநகர அணி நிர்வாகி குமரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


