மத்திய அரசின் மும்மொழி கொள்கையை கண்டித்து தூத்துக்குடியில் திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு பாஜகவின் மும்மொழி இந்தி திணிப்பை எதிர்த்து திமுக கட்சி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு (FSO-TN)மற்றும் தமிழ் மாணவர் மன்றம் சார்பில் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் திமுக மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண்குமார் முன்னில வகித்தார். இதில், வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஆகாஷ் பாண்டியன், கனகராஜ், கோகுல்நாத், பிரதீபா, யோகலட்சுமி, மாநகர அமைப்பாளர் டைகர் வினோத், துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், கார்த்திகேயன், கந்தசாமி, சத்தியா, ஈஸ்வரி, மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து 200 பேர் கலந்து கொண்டனர்.


