தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது (2010), தமிழ்நாடு அரசின் தூயதமிழ்ப் பற்றாளர் விருது (2022) ஆகிய விருதுகளைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது பெற்றிருக்கும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர், கணினித் தமிழறிஞர், எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்கு, தேனி முல்லைப் பெரியாறு முத்தமிழ் மன்றம் மற்றும் தேனி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தேனி என். ஆர். அழகர்ராஜா கல்வி அறக்கட்டளை இணைந்து தேனி இன்டர்நேசனல் ஓட்டலில் நடத்திய பாராட்டு விழா நடத்தியது. இப்பாராட்டு விழா நிகழ்வில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக் கல்வி நிறுவனங்களின் தலைவர் த. ராஜமோகன் தலைமை வகித்தார். கலைச்சுடர்மணி எஸ். பன்னீர்செல்வம் வரவேற்றார். எம்.எம். சிறப்பு மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் ஆர். பாஸ்கரன், இந்திராணி ஜேக்கப், என். ஏ. அஜய் கார்த்திக்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விருதாளரை பாராட்டினார். விருதாளர், எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்கு தலைப்பாகை அணிவித்ததுடன், சந்தன மாலை மற்றும் பொன்னாடை அணிவித்துப் பாராட்டிச் சிறப்பித்தனர். முன்னதாக பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.
சொல்லேர் உழவர் கவிஞர் கணேசன், என். ஏ. ஆதித்ய சிவராம ராஜா, அரிமா எஸ். பிரபு, வே. சிதம்பரம், கவிஞர் ம. கவி. கருப்பையா, எழுத்தாளர் தேனி பொன்கணேசன், இளஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


