தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை செய்ய வேண்டும் என தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தாெடர்பாக தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக மாவட்ட செயலாளர் செல்வகுமார் வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாநகராட்சியின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4 வது பைப்லைன் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு கருப்புநிறக்குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. ஆனால் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டு குறுகிய காலக்கட்டத்திலேயே வடிகால் பணிகளை மேற்க்கொள்வதற்காக பல இடங்களில் தோண்டி சேதப்படுத்தப்படுகிறது.
பல இடங்களில் தற்போது கருப்புநிறக்குழாய்கள் அமைத்திட சாலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பகுதியில் என்னென்ன வசதிகள் செய்யப்பட இருக்கின்றன என்பது மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியும்…அப்படியிருக்கும் சூழலில் இதுபோன்ற நடவடிக்கை பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட வேண்டும் என்றஎண்ணத்திலோ அல்லது தனிநபர்கள் ஆதாயம் அடைய வேண்டும் என்ற நோக்கத்திலோமாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறதோ என பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தற்போது பல பகுதிகளில் புதிதாக போடப்பட்ட சாலைகளை உடைத்து கருப்பு நிறக்குழாய்கள் பதிக்கப்படுகிறது அப்படியெனில் ஏற்கனவே பதிக்கப்பட்ட கருப்புநிறக் குழாய்கள் என்னவாயிற்று??? கருப்புநிறக் குழாய்கள் பதிக்கப்படுவதில் முறைகேடு ஏற்பட்டுள்ளதோ என பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது??! தமிழக அரசு உரிய விசாரணை செய்து பொதுமக்கள் வரிப்பணம் வீணாக்கப்படாமல் இருந்திட தேவையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.


