தமிழ்நாட்டில் திருநெல்வேலி & தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தேரிக்காடு வளைகுடாவில் உள்ள பாலைவனங்கள் போல் அமைப்பு கொண்ட பகுதி ஆகும். இது போன்ற பகுதி தமிழ்நாட்டில் வேறு ஒரு இடத்திலும் இல்லை நமது பகுதியில் உள்ளது மிகவும் சிறப்பு ஆகும். வளைகுடா நாடுகளில் உள்ள பாலைவனங்களில் பல்வேறு சுற்றுலா திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு நல்ல வருவாய் ஈட்டி வருகிறார்கள். மிக சமீபத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுலா அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் திருநெல்வேலி & தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள இந்த தேரிக்காட்டு பாலைவனத்தில் சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரிக்காடு பாலைவனங்கள் போல் அமைப்பை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து 50 மீட்டர் உயர வனக் கோபுரம் டென்மார்க்கில் 45 மீட்டர் உயர வனக் கோபுரம் போல் அதே மாடலாக வைத்து வனக் கோபுரம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டென்மார்க்கில் நாட்டில் அமைந்துள்ள 45 மீட்டர் உயர வனக் கோபுரம். இது குறித்து மேலும் விபரங்களுக்கு இந்த இணையதளத்தில் உள்ளது
https://www.campadventure.dk/en/skovtaarnet/
இந்த வன கோபுரம் அமைக்கும் போது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தேரிக்காட்டில் பெரிய தேரிகாடு தேர்வு செய்து நடு காட்டில் அமைக்க வேண்டும். தற்போது உள்ள சாலையிலிருந்து இந்த தேரிக்காட்டு உயர் கோபுரம் செல்ல நான்கு சக்கர வாகனம் வழியாகத்தான் செல்ல வேண்டும். இவ்வாறு செல்லும் போது பாலைவனத்தில் வாகன சாகமாக இந்த பாதை இருக்கும். இது சுற்றுலா மக்களுக்கு சாகச சுற்றுலா திட்டத்தின் கீழ் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இந்த வன கோபுரம் சுமார் 50 மீட்டர் உயரத்தில் இருக்கும் போது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் முழுவதும் இந்த கோபுரத்தின் மேல் நின்றால் தெரியும் படியாக இருக்கும். இந்த கோபுரத்தில் மேலே ஏறுவதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். வன கோபுரத்தின் நடுவில் இரண்டு லிப்ட் அமைக்க வேண்டும். வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த லிப்ட் வழியாக எந்த வித கட்டணமும் இன்றி மேலே செல்லலாம். மற்ற சாதாரண பயணிகள் லிப்ட் வழியாக மேலே செய்ய கட்டணம் செலுத்த வேண்டும்.
1. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம்
2. ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனி கழிவறை வசதி
3. முழுவதும் டிஜிட்டல் கியூ ஆர் கோடு முறையில் இயங்கும் அனுமதி சீட்டு எடுக்கும் அலுவலகம்
4. குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா
5. உணவகம் மற்றும் தேனீரகம்
6. அந்த பகுதி மண் சார்ந்த இயற்கை உணவு பொருட்கள் விற்பனை நிலையம்
7. வன கோபுரத்தின் மேல் ஒரு கோபுரம் சார்ந்த உணவகம். (இதிலிருந்து வாடகை அரசுக்கு வருவாய் கிடைக்கும்)
8. சிறிய நிகழ்ச்சிகள் நடத்தும் சுமார் 100 முதல் 200 நபர்கள் பங்கேற்க அளவில் திறந்தவெளி கலையரங்கம்
9. இரவு நேரத்தில் உயர் கோபுர விளக்குகள்
10. மாநில நெடுஞ்சாலையில் இருந்து சாலையிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்துக்கு உயர் கோபுரத்திற்கு செல்லும் பாதையில் மிதிவண்டியில் செல்லும் சைக்கிள் பாதை
11. தேரிகாடு எவ்வாறு தோன்றியது ஏன் இந்த பகுதி மட்டும் எவ்வாறு உள்ளது பற்றிய ஆராய்ச்சி முப்பரிமாண விளக்கப்படங்களுடன் கூடிய புவியியல் சார்ந்த மீயூசியம்
12. வன கோபுரத்தின் மேல் அமர்ந்து இயற்கையை ரசிப்பதற்கு என்று நான்கு பக்கங்களிலும் போதிய அளவில் இருக்கைகள் மற்றும் வியூபாயிண்ட்
13. உயர் கோபுரத்திலிருந்து கீழே குதித்து விபத்து மற்றும் உயிர் சேதம் ஏற்படுத்தாதவாறு போதிய அளவில் தடுப்புகள்.
14. இந்த உயர் கோபுரத்தில் மேலே செல்வதற்கு என்று சிறிய அளவில் சுமார் 20 நபர்கள் செல்ல தக்க அளவில் பேட்டரி கார் வசதி அல்லது குழந்தைகளுக்கான ரயில் சேவை வசதி
15. உயர் கோபுரத்திலிருந்து கீழே குதிப்பதற்கு என்று ஜிப்லைன், பாராசூட், கயிறு வழியாக சைக்கிள் பாதை போன்ற திட்டங்களுக்கு தேவையான இடவசதி உயர் கோபுரத்தில் மேல் அமைத்தல்


