சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அங்கமங்களத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம் மகன் மணிராஜ் (19). இவர் வீடு, கடைகளுக்கு பிளம்பிங் வேலை செய்து வந்தார். இவர் நேற்று சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு பன்னம்பாறையைச் சேர்ந்த இசக்கி பாண்டி என்பவர் வீட்டில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பிரேக்கர் இயந்திரத்தில் மின்சாரக் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.


