தூத்துக்குடியில் திருமண்டல நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் பள்ளியில் ஆசிரியர்களிடம் ரூ.10ஆயிரம் கட்டாய வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளதுதூத்துக்குடியில் தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் கீழ் இயங்கிவரும் விஜிஎஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியர் கட்டாயமாக ரூ.10ஆயிரம் பணம் வசூலிப்பதாக வட்டக்கோவில் ஜான்சன் டேவிட் என்பவர் வாட்ஸ்அப் சமூக வலைதளத்தில் வீடியோ வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருமண்டல நிர்வாகத்தின் பெயரில் இவ்வாறு கட்டாய வசூல் செய்யப்படுவதாகவும், இதனால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாகவும், இது பாரம்பரியமிக்க இப்பள்ளியின் பெயரை கெடுக்கும் என்றும், இதனை நிறுத்தாவிட்டால் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், இந்த சம்பவம் திருமண்டல நிர்வாகத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


