அய்யனடைப்பு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அய்யனடைப்பு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவில்லை. தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் முழுமையாக பாதிக்கப்படும். இந்த பஞ்சாயத்தில் ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிப்பதால் வீட்டுவரி, தண்ணீர் கட்டணம், மற்றும் இதர வரிகளை செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
எனவே மக்கள் நலன் கருதி பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாதால் மறியலில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கான மக்களை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது


