திருச்செந்தூரில் 100 கிலோ எடை கொண்ட ஆலிவ் ரெட்லி வகையை சேர்ந்த ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதியில் நேற்று சுமார் 100 கிலோ எடை கொண்ட கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்ததும் வனத்துறை மற்றும் கால்நடை டாக்டர் நேரில் வந்து பார்த்தனர். தொடர்ந்து ஆமையின் உடலை பரிசோதனை செய்து கடற்கரை பகுதியில் புதைத்தனர்.
இந்த ஆமை ‘ஆலிவ் ரெட்லி’ என்ற வகையை சேர்ந்தது என்றும், இந்த வகை திருச்செந்தூர் முதல் ராமேஸ்வரம் வரையிலான கடலில் அதிகளவில் காணப்படுவது ஆகும். தற்போது ஆமைகள் கடலில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால், இந்த ஆமை முட்டை இடுவதற்காக கரை ஒதுங்கும் போது அலைகளின் சீற்றத்தால் அடிபட்டோ அல்லது பாறைகளில் வேகமாக மோதியதால் காயமடைந்து இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


