தூத்துக்குடியில் இசேவை மையத்தில் நூதன முறையில் வாலிபர் பண மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கந்தசாமி புரத்தில் மணி என்பவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இங்கு நேற்று காலை ஒரு வாலிபர், அவசரமாக ரூ.2ஆயிரம் பணம் தேவைப்படுகிறது. போன்பே மூலம் அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் அவர் போன்பேயில் பணத்தை அனுப்புவது போல் நடித்துவிட்டு, பணம் அனுப்பால் ஸ்க்ரீன் ஷாட்டை காட்டினார்.
இதையடுத்து இ-சேவை மையத்தில் இருந்த பெண் ஊழியர்கள் அவரிடம் ரூ.2ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால் பணம் கிரெடிட் ஆகவில்லை. இதுகுறித்து ஊழியர்கள் கூறியபோது, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த மோசடி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக கடை உரிமையாளர் கூறினார்.


