சாத்தான்குளம் அருகே கட்டிலில் படுத்துக் கொண்டு சுருட்டு பிடித்ததால் தீவிபத்து ஏற்பட்டு முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், பேய்குளம் அருகே அறிவான்மொழியை சேர்ந்த பால் மகன் பொன் (75). இவரால் சரிவர எழுந்து நடமாட முடியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது கட்டிலில் படுத்துக் கொண்டு சுருட்டு குடித்தாராம். தீயை அணைக்காமல் கட்டிலிலே வைத்துள்ளார்.
இதில், தீயானது பரவி கட்டில் போர்வை முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் தீக்காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்


