வெம்பூரில் புதிய சிப்காட் அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
வெம்பூரில் அமையவுள்ள புதிய சிப்காட் தொழிற்சாலைக்கு ஊராட்சியில் மொத்தமுள்ள 2700 ஏக்கரில் 1700 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அரசு ஆணையை திரும்பப்பெறவும், திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


