தூத்துக்குடியில் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் ராஜாஜி பூங்கா முன்பிருந்து துவங்கி பிரதான சாலை வழியாக வந்து காமராஜ் மார்க்கெட் எதிரில் உள்ள அண்ணா சிலையை அடைந்தது. அங்கு அண்ணாவின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்ன லட்சுமி கோட்டுராஜா, பாலகுருசாமி, நிர்மல் ராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மகளிர் அணி செயலாளர் கவிதா, வழக்கறிஞர் செயலாளர் பரிதிஇளம், வழக்கறிஞர் ஜே.எஸ் ரூபஸ் அமிர்தராஜ், மருத்துவ அணி அருண்குமார், அயலகஅணி எஸ்எஸ்பி அசோக், வழக்கறிஞர் கிறிஸ்டோபர், விஜயராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், பிரபாகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுரேஷ்குமார், மாரியம்மன் கோவில் அறங்காவலர் பாலகுருசாமி, மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா முருகேசன், தேவகி, முத்துவேல் பொன்னப்பன் இசக்கி ராஜா, வட்டச் செயலாளர்கள் சுரேஷ், செல்வராஜ், ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்ம.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு மதிமுக சார்பில் காமராஜ் மார்க்கெட் எதிரில் உள்ள அண்ணாவின் திருவுருவத் சிலைக்கு மாநகர செயலாளர் முருக பூபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநில எம்.எல்.எப் செயலாளர்கள் வெங்கடேஷ், ஆறுமுகம், பொருளாளர் அனல் செல்வராஜ், மாவட்ட தலைவர் பேச்சுராஜ், மாநகர அவைத்தலைவர் தொன்மை, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், மாநகர துணை தலைவர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி செந்தாமரை கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


