தூத்துக்குடியில் மழைநீர் தேங்காத வகையில் காலியிடங்களில் மண் நிரப்பி ஒத்துழைப்பு அளித்த நில உரிமையாளர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மழைக் காலத்தின் போது மழை நீர் தேங்கிய தனியார் இடங்களில் மணல் அடித்து நிரப்பி ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 74 தனியார் இடங்களின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு தற்போது 23 இடங்களில் மண் நிரப்பி ஒத்துழைப்பு நல்கிய நில உரிமையாளர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு தெரிவித்து கெளரவித்தார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள் ரங்கசாமி, சுப்புலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


