கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் அமைப்பின் செயலாளர் விஜயன், கல்லூரி முதல்வர் செல்வராஜ், கல்லூரி நிர்வாககுழு உருப்பினர்கள் அருண், ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறை பேராசிரியர் ஶ்ரீராமஜெயா அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட நுகர்வோர் அமைப்பின் உறுப்பினர் பாக்கியலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் கைபேசி மற்றும் சிம்கார்டு பயன்படுத்துவதின் மூலம் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் மாணவர்களிடம் பேசினார். நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காணொளி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
இக்கருத்தரங்கதிற்கு கல்லூரியின் கலை மற்றும் அறிவியல் துறையை சேர்ந்த 100 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். வணிகவியல் மற்றும் இயற்பியல் துறையை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


