தூத்துக்குடியில் செல்போன் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களது பைக் பறிமுதல் செய்யப்பட்டது..
தூத்துக்குடி சாமுவேல்புரத்தைச் சேர்ந்தவர் சந்தானம் மகன் பிரம்மநாயகம் (46), கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 22ஆம் தேதி இரவு வேலை முடிந்து சைக்கிளில் கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2பேர் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.10ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பிரம்மநாயகம் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த அந்தோணி மகன் இன்பென்ட் ஜோஸ்வா (19), சுந்தரவேல் புரம் கூலப்பன் மகன் அந்தோணி சேசுராஜ் (27) ஆகிய 2பேரும் செல்போன் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்க்ள 2பேரையும் போலீசார் கைது செய்து, செல்போன் மற்றும் அவர்களது பைக்கை பறிமுதல் செய்தனர்.


