ஏரல் அருகே லோடு ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த லோடுமேன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளை, நடுத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் சண்முகம் (63), லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஏரலுக்கு லோடு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். சிறுதொண்டநல்லூர் அருகே சென்றபோது லோடு ஆட்டோ நிலை தடுமாறியதில் சண்முகம் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப் பதிந்து, லோடு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் பொன்ராஜ் மகன் அந்தோணி ராஜ் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


