கோவில்பட்டியில் குடும்ப பிரச்சனையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி தாமஸ் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி பிரபா (34). கடந்த ஒரு மாதமாக கணவன் – மனைவி இடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் பிரபாகரன் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடுதிரும்பினார்.
அப்போது வீட்டின் படுக்கையறையில் பிரபா தூக்கில் தாெங்கினாராம். இதையடுத்து அவர் மனைவியை மீட்டு ஆட்டோ மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


