நடுநாலுமூலைகிணறு ஸ்ரீ மஹா ப்ரத்யங்கரா தேவி கோவிலில் தை அமாவாசை வேள்வி, திருவிளக்கு பூஜை ஸ்ரீ ஜெகத்குரு ஆத்ம சைதன்யா சுவாமி தலைமையில் நடந்தது
திருச்செந்தூர் அருகே நடுநாலு மூலை கிணறு சைதன்யபுரியில் ஸ்ரீ மகா ப்ரத்யங்கரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி தை மாத அமாவாசையையொட்டி செவ்வாய் கிழமை மாலை ஸ்ரீ ஜெகத் குரு ஆத்ம சைதன்ய சுவாமி தலைமையில் வேள்வி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பில்லி,சூனியம், கடன், நோய், தொல்லைகளில் இருந்து முழுவதும் விடுபட அமாவாசை நடுநிசி மிளகாய் வத்தல் வேள்வி நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் வேள்வி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி மாரியப்பன் மற்றும் பக்தர்கள் பேரவை யினர் சிறப்பாக செய்திருந் தனர்.


