சாத்தான்குளம் அருகே குடும்ப பிரச்சனையில் பூச்சிமருந்தைக் குடித்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பள்ளக்குறிச்சி ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் தம்பதி ராஜ்குமார் மனைவி இலக்கியா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், இதுதொடர்பாக ராஜ்குமாரின் தந்தையும் சகோதரரும் இலக்கியாவிடம் சமரசம் பேசியதாகவும், இதனால் அவர் வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி இத்தம்பதி பனங்கிழங்கு எடுப்பதற்காக தோட்டத்துக்குச் சென்றனராம். அப்போது, இலக்கியா அங்கிருந்த பூச்சிமருந்தைக் குடித்து மயங்கி விழுந்தாராம். அவரை மீட்டு உடன்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின்பேரில், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


