தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் கண்ணாடி இழை படகு எரிந்து சேதமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை சார்பில் சூழல் சார்ந்த சுற்றுலா நடந்து வந்தது. இதற்காக கண்ணாடி இழை படகுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த படகுகள் பழுதடைந்ததால் அந்த பகுதியில் கடற்கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நேற்று இரவு திடீரென ஒரு கண்ணாடி இழை படகு தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
அப்போது, அந்தபகுதியில் வந்த மீனவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். தருவைகுளம் பகுதியில் தொடர் தீவிபத்துக்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


