தூத்துக்குடியில் தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் கட்டிட பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடி மாநகரின் அடையாளமும் பிரதான தொழிலுமான உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்திற்கு எனது தந்தையாரும் கலைஞரின் முரட்டு பக்தருமான என்.பெரியசாமி நினைவாக ஒரு புதிய கட்டிடம் கட்டி தருகிறேன் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அதனைத் தொடர்ந்து தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ள கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்றார்.
ஆய்வின் போது, திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், நிர்வாகி ஏசுவடியான், தொ.மு.ச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


