சங்கரலிங்கபுரத்தில் தீண்டாமை சுவரை அகற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலை முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதி திராவிட பகுதி மக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் மேலும் ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தி வந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இதற்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, இன்று தூத்துக்குடி அம்பேத்கர் சிலை முன்பு தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தேசியக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


