தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மூன்றாவது சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை நளினிமாலா வரவேற்று பேசினார். நாகர்கோவில் லையன்ஸ் கிளப் அமைப்பின் செயலாளர் பாலசங்கரி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
லயன் தலைவர் ஜீவரத்தினம் மற்றும் பொருளாளர் லயன் மனோன்மணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு குடியரசு தினவிழா வாழ்த்து தெரிவித்தனர். அதன் பின் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியை கௌரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியை கிங்ஸ்லின் சோபியா நன்றியுரையாற்றினார்.


