தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 76வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தனசேகரன் நகர் காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் கே.பெருமாள்சாமி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
விழாவில், அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ், தெற்கு மாவட்ட தலைவர் டி.டேவிட் பிரபாகரன், வடக்கு மண்டல தலைவர் சேகர், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், டிசிடியூ மாநில செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி, மாநகரச் செயலாளர் இக்னேசியஸ்,கோபால், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், எஸ்சி/எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு, ஊடகப்பிரிவு சுந்தர்ராஜ், சேகர், சாந்தகுமார், வர்த்தக காங்கிரஸ் சம்சுதீன், தெர்மல் முத்து, சேவியர் மிஷ்யர் சுந்தர்ராஜ், மகிளா காங்கிரஸ் உமா மகேஸ்வரி, செல்வம், ஜோக்கின்ஸ், பிரசாந்த், சுந்தர், சக்திவேல் மாரிமுத்து, சீனி, கணேசன், அமுதா, கிருஷ்ணம்மாள்,சங்கர், ஐஎன்டியூசி சார்ந்த முத்து, ரமேஷ்,சாரதி, கிரிதரன், பிரபு, சண்முகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


