மணக்கரையில் “காசநோய் இல்லா தமிழ்நாடு 100 நாள் பிரச்சாரத்தை முன்னிட்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
மணக்கரையில் காசநோய் இல்லா தமிழ்நாடு 100 நாள் பிரச்சாரத்தை முன்னிட்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் இல்லா தமிழ்நாடு 100 நாள் பிரச்சாரத்தை முன்னிட்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் இன்று மணக்கரை அருகேயுள்ள தனியார் தொழிற்சாலையில் நடைபெற்றது.
முகாமினை தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் பழனி ராஜ் துவக்கி வைத்தார்கள். தொழிற்சாலையில் கணக்கு மேலாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார்கள். தொழிற்சாலை மேலாளர் பாலகுரு அனைவரையும் வரவேற்று பேசினார். இம்முகாமில் 60 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார். இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் கிருஷ்டி, சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, முத்துவேல், தொழிற்சாலை போக்குவரத்து பொறுப்பாளர் லோகநாதன், செவிலியர் சண்முக சுந்தரி சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு செய்திருந்தது.


