தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 15வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்ட பசுமைக் குழு, முத்துநகர் இயற்கை அமைப்பு, தூத்துக்குடி, நெல்லை இயற்கைச் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தென்காசி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள பாசன குளங்களில் நீர்வாழ் பறவையினங்கள் கணக்கெடுக்கும் பணி பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறுகிறது.
இப்பணிகள் இன்று தொடங்கியது. ஜனவரி 26ஆம் தேதி வரை பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. இதில் பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகள், பறவைகள் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம், நயினார்குளம், கங்கைகொண்டான், சூரங்குடி ஆகிய குளங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் திருப்பணிசெட்டிகுளம், மூப்பன்பட்டி கண்மாய் ஆகிய நீர்நிலைகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் வாகைக்குளம், ராஜகோபாலப்பேரி குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.


