குடியரசு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
நாடு முழுவதும் குடியரசு தினவிழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடம் இடங்களான சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருப்புபாதை காவல் சார்பு ஆய்வாளர் பெருமாள் மற்றும் ஆர்பிஎப் காவலர்கள் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மற்றும் கருவிகளை கொண்டு தீவிர சோதனை செய்தனர். மேலும் தண்டவாளம், ரயில் நிலையம் வாகனம் நிறுத்தும் இடம், ரயில் நிலைய பிளாட்பார பகுதிகளில் சோதனை செய்தனர்.


