தூத்துக்குடியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் எம்பவர் இந்தியா அமைப்பு சார்பில் சாலை பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் எம்பவர் இந்தியா சமூக அமைப்பு சார்பில் புதூர் பாண்டியபுரம் டோல் பிளாசாவில் சாலை பாதுகாப்பு தினம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தூத்துக்குடி திட்ட இயக்குநர் சிவம் சர்மா தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினரும் எம்பவர் இந்தியா கெளரவ செயலாளருமான ஆ.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து பேசும்போது “இந்தியாவில் சாலை விபத்துக்களால் அதிகளவில் மரணங்கள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஜனவரி மாதம் இந்தியா முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடியில் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் அனைத்து வாகன ஓட்டுநர்களுக்க்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஐலைன் பவுன்டேசன் சார்பில் கண் பரிசோதன முகாம், மோகன் டயாபடீஸ் சென்டர் சார்பில் நீரழீவு நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இந்துஸ்தான் லைன்கேர் சார்பில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சுதர்சன், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் வீரராஜீவ் மணி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை புதூர் பாண்டியபுரம் டோல் பிளாசா மேலாளர் அவதார் சிங், எம்பவர் இந்தியா திட்ட பணியாளர் தீபக் ஆகியோர் செய்திருந்தனர்.


