தூத்துக்குடி மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லத்திற்கு ரொட்டேடர் கட்டில் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் உதவும் கரங்கள் முதியோர் இல்லத்தில் நோயாளிக்கான ரொட்டேடர் கட்டில், அவர்களுக்கு தேவையான டையப்பர்ஸ் போன்ற அத்யாவசிய பொருட்களை கிளாரன்ஸ் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். தங்களது சொற்ப வருமானத்திலும் தேடி தேடி உதவும் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு முதியோர் இல்லத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கொண்டனர்.


