தூத்துக்குடி கலைஞர் நகர் பகுதியில் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 7வது வார்டுக்கு உட்பட்ட கலைஞர் நகர் பகுதியில் பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்டச் செயலாளர்கள் தினகரன், ரவிச்சந்திரன், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் எமல்டன், தகவல் தொழில்நுட்ப அணி வட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்னோசன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


