பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பொத்தக்காலன்விளையில் திருக்கல்யாண மாதா திருத்தலம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம் . அதன்படி 112ம் ஆண்டு திருத்தல தேரோட்ட பெருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை சிறப்பு திருப்பலி நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சியில் நடைபெற்று வந்தன .
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை திருத்தல அதிபர் ஜஸ்டின் சிறப்பு பிரார்த்தனை செய்து மந்திரித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பு மிக்கேல் சமனசு சொரூபம் முதலில் வந்தது. இதனை தொடர்ந்து ஆடம்பரமாக திருக்கல்யாண மாதா பவனி வந்தது.
இதில் கலந்துகொண்ட ஆயிரம் கணக்கான கிறிஸ்தவர்கள் மாதாவின் பாடல்களுடன் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். கோவிலை சுற்றி மீண்டும் தேர் நிலையத்துக்கு வந்தடைந்தது. இதில் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு திருத்தலம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.


