தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலூகா, முத்தாலங்குறிச்சி எனும் தாமிரபரணி கிராமத்தினை சேர்ந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் 80க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். களப்பணியாக சென்று தாமிரபரணி, சுதந்திர போராட்ட வீரர்கள், சித்தர்கள், ஜமீன்தார்கள், மலை பயணங்களை, தொல்லியல் பயணங்கள் சென்று இவர் இந்த நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு தமிழக அரசு தமிழ்ச்செம்மல் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இவர் நாடகங்களில் எழுத்தாளராகவும், நடிகராகவும் பயணித்த வகைக்காக தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்வில் கலை நன் மணி விருதை வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கீழ் இயங்கி வரும் கலை அமைப்புகளிலும் இவர் உறுப்பினராக உள்ளார். இவருக்கு தமிழன்டா இயக்கம், கலைக்குழு, கலைக்கூடம் சார்பில் வழங்கும் 2025 ஆம் ஆண்டுக்கான தமிழன்டா விருது வழங்கப்பட்டது. விருதை தமிழன்டா இயக்ககம் தலைவர் கலைச்சுடர் மணி செ. ஜெகஜீவன் தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள அலுவலத்தில் வைத்து வழங்கினார். விருது கிடைத்த முத்தாலங்குறிச்சி காமராசுவை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் வாழ்த்தினர்.


