தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருக பக்தர்கள் 100க்கும் மேற்பட்டோர் வருடம் தோறும் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதற்காக சைக்கிளிலே பயணம் செய்து வருகை தந்து முருகனை வணங்குவார்கள்.
அதே போல் இந்த ஆண்டும் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதற்காக அணைப்பட்டி கிராமத்தில் இருந்து 150க்கும் மேற்பட்டோர் 33 ஆம் ஆண்டு பயணமாக கடந்த வியாழக்கிழமை கிளம்பினர்.
நான்காவது நாளான இன்றைய தினம் மாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சைக்கிளிலேயே கோவில் வளாகப்பகுதிக்கு வருகை தந்தனர்.
அவர்கள் வந்த சைக்கிளை கோவில் வளாகத்தில் நிறுத்தி விட்டு 150 பேரும் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கோவிலுக்குள் சென்று முருகனை தரிசனம் செய்தனர்.
ஒரே நேரத்தில் 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் பச்சை வண்ணத்தில் ஆடை அணிந்து சைக்கிளில் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தந்ததால் திருச்செந்தூர் கோவில் வளாகம் முழுவதும் பச்சை வண்ணத்தில் காணப்பட்டது.


