தூத்துக்குடியில் ஜே.சி.ஐ பெம் ஸ்டார்ஸ் அமைப்பின் சார்பில் முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியில் ஜே.சி.ஐ பெம் ஸ்டார்ஸ் சார்பில் பொங்கல் விழா டி.எம்.பி. காலனியில் நடைபெற்றது. விழாவில் ஜே.சி.ஐ. தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ் தலைவர் பிரைனா பிரபாகரன் தலைமை தாங்கினார். பொங்கல் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கான கோலப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், ஹில் அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுடன் பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செயலாளர் இனிகோ கார்டோஸா பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியினை ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர். ஷாரன் செய்திருந்தார். விழாவில் ஜேசிஐ பெம் ஸ்டார்ஸ் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


