திருச்செந்தூரில் குடிநீர் குழாய் அருகே குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுவதால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றன. கோவில் அருகே குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் அருகே குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இதனால் அந்த குடிநீர் குழாயை பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது பொங்கல் விடுமுறை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றன. கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுகாதாரமாக பேணவும், அங்குள்ள குப்பைகளை அகற்றவும் நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


