கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மருத்துவ அலுவலர் ஜோசுவா பிரவுன் தலைமை தாங்கினார். சித்த மருத்துவ அலுவலர் ரதி செல்வம் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன் வரவேற்றார்.
விழாவில் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆற்றுப்படுத்துனர், ஆய்வக நுட்பநர்கள், ரேடியாகிராபர், கிராம சுகாதார செவிலியர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவம் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் பாலகண்ணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.


