சென்னை புத்தக கண்காட்சியில் தினமலரின் தாமரை பிரதர்ஸ மீடியாவின் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம் என்ற நூல் வெளியீடு 7 ந்தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நூலை சென்னை புத்தக கண்காட்சியில் உள்ள தினமலர் ஸ்டால் 45 ,46 ல் வைத்து நடைபெறுகிறது. மூத்த ஆன்மிக எழுத்தாளர் பிரபு சங்கர் வெளியிடுகிறார். தென்காசி மாவட்டம் தோரண மலை முருகன் கோயில் பரம்பரை தர்மகர்த்தா செண்பகராமன் நூலை பெறுகிறார். தாமரை பிரதர்ஸ் மீடியா துணை மேலாளர் ரவி, ஊடகவியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஏற்புரை வழங்குகிறார்.


