தூத்துக்குடியில் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பெற்றி பெற பாடுபடவேண்டும் என அறிவுறுத்தினார்.
தூத்துக்குடியில் திமுக நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்க மஹால் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசும்போது கடந்த பாராளுமன்ற தேர்தலில் 2019 தேர்தலில் பெற்ற வாக்குகள் அதை தொடர்ந்து 2024 நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் குறித்தும் இதைபோல் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்களை கோடிட்டு பேசினார்.
அப்போது கடந்த தேர்தலில் திருவைகுண்டம், திருச்செந்தூர், உள்ளிட்ட பகுதிகளில் குறைவான வாக்குகள் பெற்ற இது குறித்து கேள்வி எழுப்பிய முதல்வர் மு க ஸ்டாலின் அதிக வாக்குகள் பெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி தோல்வி அடைந்தது குறித்து கேள்வி எழுப்பிய முதல்வர், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்காக நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் கட்சி தொண்டர்களின் தேவையை மாவட்ட நிர்வாகிகள் செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என 180 பேர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் ரோடு ஷோனா இரு புறங்களும் சாலையில் நின்ற பொதுமக்களுக்கு கைகளை அசைத்து அவர்கள் வழங்கிய புத்தகம் மற்றும் சால்வையைப் பெற்றுக் கொண்டார். மேலும் அவர்களை கைக்கூலுக்கி சிரித்த முகத்துடன் அவர்களிடம் பேசினார்.
தொடர்ந்து பாளையங்கோட்டை சாலையில் உள்ள வஉசி கல்லூரி அருகே உள்ள மாநகராட்சி சொந்தமான நூலகத்துக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டார். மேலும் அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்களிடம் நூலகம் பற்றி கேட்டறிந்தார். இதை தொடர்ந்து மாநகராட்சி பூங்கா தேனீர் விடுதியில் பொதுமக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்தினார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து வாகனம் மூலம் சத்யா தங்கும் விடுதிக்கு சென்ற அவர் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


