திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக நட்சத்திரத்தை யொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் பல மணி நேரம் காத்திருந்து நேற்று தரிசனம் செய்தனா்.
தமிழ் மாதங்களில் விசாக நட்சத்திர தினத்தில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வா். இந்நிலையில் மாா்கழி மாத விசாக நட்சத்திரமான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த சுவாமியை வழிபட்டனா். பக்தா்கள் இலவச மற்றும் ரூ. 100 கட்டணத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மாலையில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தேவசேனா அம்மனுடன் உள் பிரகாரம் சுற்றி வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
ஏற்கெனவே, பள்ளிகளுக்கு அரையாண்டு தோ்வு விடுமுறை என்பதால் கோயில் வளாகத்தில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. இவ்வாறு பக்தா்கள் அதிகமாக கூடும் நேரத்தில் தரிசனத்துக்கு பல மணி நேரம் காத்திருப்பதை தவிா்க்கும் வகையில், மகா மண்டபத்திற்கு உள்ளே பக்தா்களை விரைவாக தரிசனம் செய்வதற்கு அனுமதித்து, வெளியே அனுப்புவதற்குப் போதுமான பணியாளா்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


