கருங்குளம் ஒன்றிய பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
செய்துங்கநல்லூர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை அமலா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேச்சு போட்டி, பட்டிமன்றம் கலைநிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இராமனுஜம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. பள்ளிக்கு தலைமை ஆசிரியர் வசந்தி தலைமை வகித்தார். பள்ளியில் மாணவ மாணவிகளிடையே பேச்சுபோட்டி, கலைநிகழ்ச்சி நடந்தது. இனிப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர் மைக்கேல் நன்றி கூறினார்.
செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபக்குமார் தலைமை வகித்தார். ஆசிரியை ஸ்ரீலதா வரவேற்றார். பள்ளி தாளாளர் கத்தாது காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


