தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் டிவிஏ பிரைட்டர் தலைமையில், மகளிரணி துணைச் செயலாளர் சண்முககுமாரி, மாவட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்வராஜ் ஆகியோரின் முன்னிலையில் எம்.ஜி.ஆர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவர் தங்க மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி, எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திருமலைத்தங்கம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மருது பாண்டி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் வீரபுத்திரன், சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு மாவட்ட செயலாளர் தாமஸ் ஜோவர், இதய தெய்வம் அம்மா பேரவை மாவட்ட தலைவர் குமார், பொருளாளர் சக்திவேல், இணைச் செயலாளர் ஹரிஹர சுதன், சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு துணைச்செயலாளர் ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


