ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியத்தினை சங்கர் நகர் ஜெயந்திரா பள்ளி மாணவர்கள் வருகை தந்தனர். இவர்கள் பி சைட், சி சைட் போன்ற இடங்களைபார்வையிட்டனர். அவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார். பள்ளி மாணவ மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. சைட் மியூசிய பொறுப்பாளர் அந்தோணி ஆசிரியர்கள் மகாராணி, சொர்ண வள்ளி, சிநேனா, கிருஷ்டி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


