பெல்காவி – தூத்துக்குடி இடையே கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெல்காவி ரயில் (வண்டி எண். 07361) நாளை (20-12-2024) வெள்ளிக்கிழமை காலை 09:55 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும் நேரம்.
இந்த ரயில் லொண்டா ஜங்ஷன், தார்வார் ஹூப்ளி ஜங்ஷன், மயிலரா கவேரி, டாவணிக்கரே, கடூர், அரிசிக்கரே ஜங்ஷன், எஸ்.எம்.வி.டி. பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம் ஜங்ஷன், நாமக்கல், கரூர் ஜங்ஷன், திண்டுக்கல் ஜங்ஷன், மதுரை ஜங்ஷன், விருதுநகர் ஜங்ஷன், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.
தூத்துக்குடி-. எம்.வி.டி பெங்களூர் : வண்டி எண். 07362 (21-12-2024) சனிக்கிழமை மதியம் 01-00 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை 03-00 மணிக்கு எஸ்.எம்.வி.டி. பெங்களூர் சென்றடையும். தற்போது புக்கிங் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாநகரப் பயணிகள் இச்சிறப்பு ரயில்களை அதிக அளவில் பயன்படுத்துமாறும், ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க சார்பில் செயலாளர் பிரம்மநாயகம் நன்றிகளை தெரிவித்துள்ளார்.


