அகப்பைகுளத்தில் தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தில் பணியாற்றும் 475 ஆலய பணியாளர்களுக்கான கிறிஸ்துமஸ் வெகுமதி வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் 6 சபை மன்றங்களில் 126 சேகரங்களில் ஆலயத்தை சுத்தப்படுத்தி பராமரிக்கின்ற குடும்பமாக பணி செய்கின்ற பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ளவர்களிடம் பெறப்பட்ட குருவானவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட 475 நபர்களுக்கு கிறிஸ்துமஸ் வெகுமதி வழங்கும் விழா நடைபெற்றது.
சேகரத்தலைவர் பாஸ்கரன் ஆரம்ப ஜெபத்தை செய்தார். அகப்பைக்குளம் அந்திரேயா பாடகர் குழுவினர்கள் சிறப்பாக பாடல்கள் செய்திருந்தார்கள். ஆலய பரிபாலன பொருளாளர் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் சிறப்பு வாழ்த்து செய்தியை வழங்கினார். உபதலைவர் தமிழ்செல்வன் திருமண்டல பொருளாளர் டேவிட்ராஜ் வாழ்த்துச் செய்தியை வழங்கினார்.
ஆலய பரிபாலன கமிட்டி அங்கத்தனர்கள் சேகர கமிற்றி அங்கத்தினர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிகளை சேகர பொருளாளர் ஸ்டிபன் ஞானதுரை திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜேசுதாஸ் தொகுத்து வழங்கினார். பங்கு பெற்றவர்கள் சபை மனறங்களிலுள்ள சேகரங்கள் வாரியாக அழைக்கப்பட்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வெகுமதி மற்றும் கேக் வழங்கப்பட்டது.
உரிய நேரத்தில் விண்ணப்பதாரர்களை நேரில் வர செய்த அனைத்து குருமார்க்கும் கிறிஸ்துமஸ் வெகுமதி வழங்கிய குடும்பங்களுக்கும் விழா ஏற்பாடுகளை மிகவும் நேர்த்தியாக செய்த அனைத்து தன்னார்வளர்களுக்கும், பரிபாலன பொருளாளர் பொன்ராஜ் மற்றும் அனைத்து கமிற்றி உறுப்பினர்களுக்கும் சேகரதலைவர் பாஸ்கரன் நன்றி கூறினார். இறுதியில் குருத்துவசெயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் சிறப்புஜெபத்தை ஏறேடுக்க உபதலைவர் தமிழ்செல்வன் ஆசி கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகப்பைக்குளம் சேகரத்தலைவர் பாஸ்கரன், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜேசுதாஸ், பொருளாளர் ஸ்டிபன் ஞானதுரை ஆலயபரிபாலன, பொருளாளர் பொன்ராஜ், செயலர் செல்லத்துரை மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.


