தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 19ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு டிசமபர் மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” வருகின்ற 19.12.2024 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ‘முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.


