தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அன்னை பாகம் பிரியாள் உடனுறை அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோயிலில் நாளை 16ஆம் தேதி முதல் மார்கழி மாதம் பிறப்பு முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது
இதன்படி காலை 3.30மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4 மணிக்கு திருவனந்தல் 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை, 8 மணிக்கு கால சந்தி 10 மணிக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும் கோவில் நடை அடைக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மீண்டும் கோவில்நடை திறக்கப்படுகிறது.
5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது இரவு 8 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது வாரந்தோறும் வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஆகிய மூன்று தினங்கள் மட்டும் மதியம் 12 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும் என கோவில் செயல் அலுவலர் தமிழ் செல்வி தெரிவித்தார்.


