முத்தாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் பொன்இசக்கி லெட்சுமணன் மாவட்ட ஆட்சி த் தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற நமது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் ஊரான முத்தாலங்குறிச்சி மக்களை காப்பாற்ற தாங்கள் பல்வேறுநடவடிக்கை எடுத்து வருகிறீர்கள். மிக்க நன்றி. நேற்று ஆழிகுடி, முத்தாலங்குறிச்சியில் நேற்று இரவு முதல் மின்சாரம் இல்லை. ஆற்று வெள்ளத்தினால் பாதிக்கப்படும் இடங்களுக்கு செல்லும் மின் இணைப்புகளைதுண்டித்து விட்டு மற்ற இடங்களுக்கு மின்சாரம் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். ஆழிகுடிக்கு நேற்று இரவே மின் இணைப்பு கொடுத்து விட்டார்கள். ஆனால் முத்தாலங்குறிச்சிக்கு இதுவரை மின்இணைப்பு கொடுக்க வில்லை. அதிகாரிகள் அரைமணி நேரத்தில் மின்சாரம் வந்து விடும் என்று கூறுகிறார்கள் . ஆனால் இதுவரை வரவில்லை. இதனால் குழந்தைகள்,பெண்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆற்று வெள்ளம் முத்தாலங்குறிச்சியில் குடியிருப்புக்குள் ஆற்று வெள்ளம் செல்ல வில்லை. கரை வரையே வெள்ளம் செல்கிறது. எனவே தயவு கூர்ந்து மக்கள் பிரச்சனை தீர்க்க ஆழிகுடி கிராமத்துக்கு மின் இணைப்பு கொடுத்தது போலவே முத்தாலங்குறிச்சிக்கு மின்இணைப்பு கொடுக்கவும். என்று அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.


