புயல் காரணமாக நிறுத்தப்பட்ட தூத்துக்குடி – சென்னை விமான சேவை இன்று காலை 11 மணி முதல் மீண்டும் துவங்குகிறது.
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நேற்று காலை முதல் கனமழை பெய்யத் துவங்கியது. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. மோசமான வானிலை காரணமாக 13 மணி நேரங்களாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது. தூத்துக்குடி விமானம் உள்ளிட்ட 55 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று டிசம்பர் 1ம் தேதி அதிகாலை 4 மணிக்கு விமான சேவை மீண்டும் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை 1 மணிக்கே விமான சேவை துவங்கியது. தூத்துக்குடிக்கு இன்று காலை 7 மணிக்கு வரவேண்டிய இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இன்று காலை 11:00 மணி முதல் மீண்டும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமான சேவை துவங்கப்படுகிறது. இதற்காக பயணிகள் போர்டிங் பாஸ் போடும் பணி தற்போது துவங்கியுள்ளது.


