ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் நிலையில் சென்னை – தூத்துக்குடி விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது. புயல் எதிரொலியாக சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை – தூத்துக்குடி இடையே இன்று விமான சேவை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது


